சீனாவின் நான்ஜிங் வனப் பல்கலைக்கழகத்துடன், திரிபுரா அரசின் மூங்கில் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மூங்கில் தொழில் வளர்ச்சிக்காக அயல்நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள முதல் மாநிலம் திரிபுரா என்று அம்மாநில வனத்துறை அமைச்சர் ஜிதேந்திர செளத்ரி கூறினார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், தரை விரிப்புகள், மூங்கில் கூடைகள், சார்கோல், வினிகர் உள்படப் பல்வேறு வகையான பொருட்களின் உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை சீனா வழங்கும்.
முன்னதாக சீனாவின் நான்ஜிங் வனப் பல்கலைக்கழகத்தில் இருந்து பேராசிரியர் ஜாங் தலைமையில் வந்திருந்த 3 பேர் கொண்ட குழுவினர், திரிபுராவின் மலைப் பகுதிகளில் பரவிக் கிடக்கும் மூங்கில் தொழிலைப் பார்வையிட்டனர்.