திரிபுராவில் இருவேறு அமைப்புகளைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் தங்கள் ஆயுதங்களுடன் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.
திரிபுரா-மிசோரம் எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசியக் கட்டுமானத் திட்ட நிறுவனத்தில் பணிபுரிந்த 4 தொழிலாளர்களை தீவிரவாதிகள் சிலர் கடத்திச் சென்றனர்.
அந்தத் தீவிரவாதிகள் பி.என்.சி.டி. என்ற அமைப்பைச் சேர்நதவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில், கண்டச்சேரா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பி.என்.சி.டி. அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் நேற்று சரணடைந்தனர். இவர்கள் வங்கதேசத்தில் இருந்து திரிபுராவுக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல, பி.எல்.எஃப்.டி. என்ற மற்றொரு அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள், கையெறி குண்டுகள், ஏ.கே.47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், முராபாரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இன்று சரணடைந்தனர்.