Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிச. 14ல் எரிகல் மழை அதிசயத்தைப் பார்க்கலாம்

டிச. 14ல் எரிகல் மழை அதிசயத்தைப் பார்க்கலாம்
, புதன், 12 டிசம்பர் 2007 (12:54 IST)
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மணிக்கு 60 முதல் 160 வரையிலான எரிகற்கள் நமது புவியை நோக்கி விழும் காட்சியைக் காணலாம் என்று கொல்கட்டாவில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் காப்பாளர் டட்டா கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பூமியின் சுழற்சிப் பாதையில் ஏற்படும் இந்த எரிகல் மழை, இந்த ஆண்டு ஜெமினி நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து விழும் எரிகல் மழையை காணப்போகிறது என்றும், அது வரும் 13, 14ஆம் தேதிகளில் அதிகமாக இருக்கும் என்றும் டட்டா கூறியுள்ளார்.

ஜெமினி நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து விழக்கூடிய எரிகல் மழை, ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடியதுதான் என்றாலும், இந்த ஆண்டு அது மிகப்பிரகாசமாக இருக்கும் என்று டட்டா கூறியுள்ளார்.

இதற்கு முன் 1996ஆம் ஆண்டு ஒரு மணி நேரத்திற்கு 110 எரிகற்கள் வரை பொழிந்ததை கண்டுள்ளனர். இந்த ஆண்டு இது மணிக்கு 160 கற்கள் வரை இருக்கும் என்றும் டட்டா கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் புதன் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருவதாலும் அது ஜெமினி நட்சத்திரக் கூட்டத்தின் பாதையில் செல்வதாலும் பளபளக்கும் மஞ்சள் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் என்றும் டட்டா கூறியுள்ளார்.

ஜெமினி நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ·பேத்தோன் என்ற வாள் நட்சத்திரத்தில் இருந்து தூசிப் படலங்களாக இந்த கற்கள் விழுவதாகவும், இப்படிப்பட்ட வாள் நட்சத்திரங்கள் சூரியனை சுற்றி வரும்போது ஒரு வித பனிக்கட்டிப் போன்ற துகள்களை தங்களது சுழற்சிப் பாதையில் விட்டுச் செல்வதாகவும், அங்கு பூமி தனது சுழற்சியில் செல்லும்போது அதனை நாம் இப்படிப்பட்ட எரிகல் மழையாக காண்கின்றோம் என்று டட்டா கூறியுள்ளார்.

இது 13, 14ஆம் தேதிகளில் எந்த நேரத்தில் நிகழும் என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil