நமது நாட்டில் கட்டுப்படியான விலையில் எரிபொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமானால், சில்லரை விற்பனையில் நிலையான எரிபொருள் விலைக் கொள்கை உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
நமது நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய்த் தேவையில் 70 விழுக்காடு இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை சர்வதேசச் சந்தையில் 100 டாலரைத் தொட்டது. இதுபோன்ற விலையேற்ற சூழ்நிலைகள் நமது பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தலை உருவாக்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், "இனி வரும் காலங்களில் எரிசக்தித் தேவைக்கு காற்று, சூரிய ஒளி போன்ற மரபுசாரா வளங்களைப் பயன்படுத்தும் கட்டாயம் உருவாகி வருகிறது" என்றும் பிரணாப் கூறினார்.