Publish Date: Tue, 11 Dec 2007 (14:04 IST)
Updated Date: Tue, 11 Dec 2007 (14:03 IST)
மணிப்பூரில் பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் 3 பேரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
உளவுத்துறை தகவலின்பேரில் இம்பால், இரோய்செம்பா பகுதிகளில் அஸ்ஸாம் ஆயுதப்படை காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில், ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த ராபிந்ரோ சிங், லெளரெம்பம் அபங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
நொன்டா ஆனங் லெய்கய் என்ற பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் மக்கள் புரட்சிக் கட்சி என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவர்கள் 3 பேரிடம் இருந்தும் துப்பாக்கிகள், வெடி குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.