Publish Date: Mon, 10 Dec 2007 (12:10 IST)
Updated Date: Mon, 10 Dec 2007 (12:10 IST)
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி அருகில் பிரம்மபுத்திரா விரைவு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 70 பேர் படுகாயமடைந்தனர்.
கெளகாத்தியில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் டி.என்.பிரம்மபுத்திரா அதிவிரைவு ரயில், சிலிகுரி அருகில் உள்ள நியூ ஜகல்புரி சந்திப்பிலிருந்து 15 கி.மீ. தொலைவில் வந்து கொண்டிருந்தபோது தடம் புரண்டது.
ரங்கபாணி நிலையத்திற்கும் நிஜ்பாரி நிலையத்திற்கும் இடையில் நேற்றிரவு 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் ரயில் பணியாளர் ஒருவர் பலியானார். பயணிகள் 70 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவரின் விவரம் முகமது இம்ராஸ் என்று தெரியவந்துள்ளது. விபத்திற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.