டிசம்பர் மாதத்திற்குப் பிறகும் சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு பேச்சு நடத்தினால் மக்களவைக்கு இடைத்தேர்தல் வரும் நிலை ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற கட்சியின் மாநில கூட்டத்தில் உரையாற்றிய காரத், குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருப்பதால் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க தங்கள் கட்சி விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு கவிழ்வதால் பா.ஜ.க. பயனடையக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ள அவர் எனினும், மத்திய அரசு சர்வதேச அணுசக்தி முகமையுடன் தொடர்ந்து பேசுவதையும் அரசு விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
சர்வதேச அணுசக்தி முகமையுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சு நடத்தினால், அதன் பின்னர் திடீர் தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராக இருக்க வேண்டிய நிலை உருவாகும் என்று அவர் எச்சரித்துள்ளார்.