Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7240 பழ‌ங்கால‌ச் ‌சி‌ன்ன‌ங்க‌ள் பாதுகா‌க்க‌ப்படு‌கி‌ன்றன : ம‌‌த்‌திய அரசு!

7240 பழ‌ங்கால‌ச் ‌சி‌ன்ன‌ங்க‌ள் பாதுகா‌க்க‌ப்படு‌கி‌ன்றன : ம‌‌த்‌திய அரசு!

Webdunia

, புதன், 5 டிசம்பர் 2007 (11:49 IST)
''நமதநா‌ட்டி‌ல் 7240 பழங்காலச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன'' எ‌ன்றம‌த்‌திஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

மா‌நில‌ங்களவை‌யி‌லகே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கப‌தில‌ளி‌த்ம‌த்‌திகலா‌‌ச்சார‌ததுறஅமை‌ச்ச‌ரஅ‌ம்‌பிகசோ‌னி, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் சார்பில் 3667 பழங்காலச் சின்னங்களும், மாநில அரசுகளில் சார்பில் 3573 பழங்காலச் சின்னங்களும் பாதுகாக்கப்படுகின்றன எ‌ன்றா‌ர்.

இவை தவிர ஏராளமான பழங்காலச் சின்னங்கள் எந்த துறையினுடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இருக்கின்றன. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகுதிகள், சிற்பங்கள், கோட்டைகள், அரிய கலைப் பொருட்கள் போன்றவை பற்றிய தகவல்களை சேகரித்து தொகுக்க தேசிய அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 24 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்துமாறு பல்வேறு மாநிலங்கள் கோரியுள்ளன. அவற்றில் 14 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்த இந்திய தொல்லியல் துறை ஒப்புதல் அளித்துள்ளது. கேரளத்தில் உள்ள தினூர், ராஞ்சியில் உள்ள குகாகர் ஆகியவை அவற்றில் அடங்கும். இமாச்சலப் பிரதேசத்தில் 40 பழங்காலச் சின்னங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil