Publish Date: Tue, 04 Dec 2007 (18:55 IST)
Updated Date: Tue, 04 Dec 2007 (18:55 IST)
சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விவகாரத்தில் மத்திய அரசுதான் இனி முடிவெடுக்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
தற்போது மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரீன் விவகாரம் குறித்து, மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று பேச்சு நடத்தினார்.
அப்போது அவரிடம், தஸ்லிமா நஸ்ரீனின் விசா காலம் நீட்டிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த விடயத்தில் மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.