Publish Date: Tue, 04 Dec 2007 (11:55 IST)
Updated Date: Tue, 04 Dec 2007 (11:53 IST)
சீக்கிய மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாற்றில் அனில் அம்பானி உள்ளிட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன அதிகாரிகள் 5 பேர் மீது லக்னோ காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
லக்னோவில் உள்ள நாகா காவல் நிலையத்தில் அப்பகுதி சீக்கிய குருத்வாரா நிர்வாக குழுவின் தலைவர் ராஜேந்திர சிங் பாகா புகார் கொடுத்துள்ளார். அதில், தனக்கு ரிலையன்ஸ் மொபைல் ஃபோனிலிருந்து சீக்கிய மதத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான எஸ்.எம்.எஸ். வந்ததாகவும், இதற்காக அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இதையடுத்து அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர், உ.பி. மாநில தலைமை மேலாளர், மண்டல மேலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Webdunia
Publish Date: Tue, 04 Dec 2007 (11:55 IST)
Updated Date: Tue, 04 Dec 2007 (11:53 IST)