புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான தொழிற்சாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதிக சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்யுத்துள்ளது.
அயல்நாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை தொடர்பான கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கும் எல்லா முயற்சிகளும் ஊக்குவிக்கப்படும் என்று மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சக இணையமைச்சர் விலாஸ் முட்டெம்வார் தெரிவித்தார்.
மேலும், தமிழகம், மராட்டியம், கர்நாடகம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்க ஆர்வம் காட்டியுள்ளன என்றும் அவர் கூறினார்.