கிராமப் புறங்களில் மின்சாரத்தைப் பகிர்ந்தளித்தல், மின் கட்டணம் வசூலித்தல் ஆகிய பணிகளில் தனியாரை அனுமதிக்கும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய எரிசக்தி அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இதைத் தெரிவித்தார்.
''இதுவரை 14 மாநிலங்களில் தனியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் மின்சாரத் துறைக்கு பெருமளவிலான நன்மைகள் உள்ளன. நுகர்வோர் சேவை, கட்டண வசூல் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மேம்படுகிறது'' என்றும் அவர் கூறினார்.