கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மக்களவையில் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மக்களவையில் இன்று பேசிய சமாஜ்வாடி கட்சியின் உறுப்பினர் சைலேந்திர குமார், நமது நாட்டில் அதிகரித்துவரும் கருக் கலைப்புகள் குறித்துக் கவலை தெரிவித்தார்.
''ஆண்டுதோறும் சுமார் 5 கோடி பெண் குழந்தைகள் கருவிலேயே கொலை செய்யப்படுகின்றன. குறிப்பாக பஞ்சாபில் கருவில் உள்ள குழந்தைகளின் பாலினத்தை கண்டறிய உதவும் ஸ்கேன் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அங்கு உயர்மட்டக் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். நாடு முழுவதும் கருவின் பாலினத்தைக் கண்டறியும் கருவிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று அவர் கோரிக்கை விடுத்தார்.