நமது நாடு முழுவதும் எள்ள அனல்மின் நிலையங்களில் கடுமையான நிலக்கரி பற்றாக்குறை உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று எரிசக்தி அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், கடந்த நவம்பர் 27 ஆம் தேதி கணக்குப்படி நாடு முழுவதும் உள்ள 27 அனல் மின் நிலையங்களில் அடுத்த 7 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளது. அதிலும் 15 நிலையங்களில் 4 நாட்களுக்குத் தேவையான இருப்பு மட்டுமே உள்ளது என்று தெரிவித்தார்.
நமது அனல் மின் நிலையங்களுக்கு நாளொன்றுக்கு சராசரியாக 22 மெட்ரிக் டன் நிலக்கரி தேவை என்ற நிலையில் 8.689 டன் மட்டுமே இருப்பு வைக்க முடிகிறது.
இதேபோல, எரிவாயு சார்ந்த மின் நிலையங்களில் எரிவாயு தட்டுப்பாடு உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை நாளொன்றுக்கு சராசரியாக 65.69 மில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயு தேவை என்ற நிலையில், 35.82 மில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.