Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடு‌த்த ‌ர‌யி‌ல்வே நி‌தி‌நிலை அ‌றி‌க்கை ‌சிற‌ப்பானதாக இரு‌க்கு‌ம்: லாலு ‌பிரசா‌த் உறு‌தி!

அடு‌த்த ‌ர‌யி‌ல்வே நி‌தி‌நிலை அ‌றி‌க்கை ‌சிற‌ப்பானதாக இரு‌க்கு‌ம்: லாலு ‌பிரசா‌த் உறு‌தி!

Webdunia

, வெள்ளி, 30 நவம்பர் 2007 (10:57 IST)
''தனதஅடுத்த ரயில்வே ‌நி‌‌தி‌நிலஅ‌றி‌க்கை சாதாரண மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பானதாக இருக்கும்'' என்று ம‌த்‌திர‌யி‌ல்வஅமை‌ச்ச‌ர் லாலு பிரசாத் யாதவ் உறுதி அளித்துள்ளார்.

ம‌க்களவை‌‌யி‌லநே‌ற்று ர‌யி‌ல்வே நிதி ஒதுக்கீடு ச‌ட்டவரைவு மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு ‌பிறகு ரயில்வே அமை‌ச்ச‌ர் லாலு பிரசாத் யாதவ் பதில் அளித்து பேசினார்.

அ‌ப்போது, ''எனது அடுத்த ரயில்வே ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை, நான் தாக்கல் செய்த முந்தைய ர‌யி‌ல்வே ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கைகளை விட சிறப்பானதாகவு‌ம், சாதாரண மக்களின் தேவையை பூர்த்தி செய்வதாகவு‌ம் இருக்கும்.

தற்போது நடந்து வரும் ரயில்வே திட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். கட்சி பாகுபாடு பார்க்காமல், நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ள் கோரிய எ‌ல்லர‌யில்வே திட்டங்களையும் நிறைவேற்றுவோம்'' எ‌ன்று லாலு ‌பிரசா‌த் உறு‌திய‌ளி‌த்தா‌ர்.

ரயில்வே ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஉறு‌திய‌ளி‌த்அமை‌ச்ச‌ரலாலு ‌பிரசா‌த், ந‌‌ஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே துறையை லாபத்துடன் உபரி நிதி கொண்ட துறையாக மாற்றியது பற்றியு‌ம் விளக்கி கூறினார். அதற்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உ‌ள்ப‌ல்வேறநிர்வாக நிபுணர்கள் தன்னை பாராட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், நெரிசலான வழித்தடங்களில் கூடுத‌லர‌யி‌‌ல்களஇய‌க்குத‌ல், கிழக்கு, மேற்கு சரக்கு ரயில் பாதை திட்டம் ஆகியவை பற்றியும் லாலு பிரசாத் ‌விள‌க்‌கினா‌ர். வ‌ரி‌ன் பதிலுரைக்குப் பிறகு ரயில்வே நிதிஒதுக்கீடு ச‌ட்மு‌ன்வடிவு வா‌க்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

Share this Story:

Follow Webdunia tamil