Publish Date: Wed, 28 Nov 2007 (17:30 IST)
Updated Date: Wed, 28 Nov 2007 (17:30 IST)
முக்கியப் பிரமுகர்களைப் பாதுகாப்பதற்காக மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரைக் கொண்டு 'சிறப்புப் பாதுகாப்புக் குழு' என்ற புதிய படை உருவாக்கப்படும் என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் மாநிலங்களையில் அளித்துள்ள பதிலில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் உள்ள 1200 வீரர்களில் 998 பேருக்கு முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
இதில் 23 பேர் பெண்களாவர் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர், தேவைக்கு ஏற்றவாறு இத்தனிப் படையினர் பயன்படுத்தப்படுவர் என்றார்.
Webdunia
Publish Date: Wed, 28 Nov 2007 (17:30 IST)
Updated Date: Wed, 28 Nov 2007 (17:30 IST)