Publish Date: Wed, 28 Nov 2007 (14:05 IST)
Updated Date: Wed, 28 Nov 2007 (14:04 IST)
பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்த 39 இந்திய மீனவர்களை 14 நாள் சிறையில் அடைக்கும்படி கராச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக 39 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்தது. மீனவர்களுடைய படகுகள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று கராச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அவர்களை 14 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து மீனவர்களை 39 அனைவரும் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Webdunia
Publish Date: Wed, 28 Nov 2007 (14:05 IST)
Updated Date: Wed, 28 Nov 2007 (14:04 IST)