Publish Date: Wed, 28 Nov 2007 (14:03 IST)
Updated Date: Wed, 28 Nov 2007 (14:03 IST)
உத்தரபிரதேசத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
உ.பி. மாநிலம் காசியாபாத் நகரத்தில் உள்ள மோகன் நகர் மேம்பாலத்தில் அயல்நாட்டு போதைப் பொருள் வியாபாரிகள் சிலர் உள்ளதாகக் காவலர்களுக்குத் தகவல் வந்தது.
இதன்பேரில் இன்று அதிகாலை 3.00 மணிக்கு மேம்பாலத்தை சுற்றிவளைத்த காவலர்கள் தினேஷ். ஜக்பால், பங்கஞ், தீபாந்தர் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதைக் கொண்டு வந்த அயல்நாட்டு வியாபாரிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Webdunia
Publish Date: Wed, 28 Nov 2007 (14:03 IST)
Updated Date: Wed, 28 Nov 2007 (14:03 IST)