Publish Date: Wed, 28 Nov 2007 (14:00 IST)
Updated Date: Wed, 28 Nov 2007 (14:00 IST)
அஸ்ஸாமில் மர அரவை ஆலைக்குள் நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 தொழிலாளர்கள் பலியாயினர்.
வடக்கு கேசார் மாவட்டத்தில் பிதார் என்ற கிராமத்தில் உள்ள மர அரவை ஆலைக்குள் நேற்று நள்ளிரவில் புகுந்த திமா ஹலாம் தவுதா என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், அங்கு பணியாற்றிய தொழிலாளர்களின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் 8 தொழிலாளர்கள் பலியாயினர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
'கருப்பு விதவைகள்' என்று அழைக்கப்படும் இந்தத் தீவிரவாத அமைப்பினர் கடந்த வாரத்தில் மட்டும் 2 மர அரவை ஆலைகளைத் தாக்கியுள்ளனர். இதில், கர்பி, நேபாளி, பெங்காலி, அஸ்ஸாமீஸ் உள்படப் பல்வேறு தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
Webdunia
Publish Date: Wed, 28 Nov 2007 (14:00 IST)
Updated Date: Wed, 28 Nov 2007 (14:00 IST)