புது டெல்லியில் தங்கியிருந்த சர்ச்சைக்குரிய வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராஜதானி இல்லத்தில் தங்கியிருந்த தஸ்லிமா நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறின.
இஸ்லாமிய மதச் சட்டங்களுக்கு எதிராக எழுதியதால் தஸ்லிமாவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதனால் அவர் கடந்த 1994 ஆம் ஆண்டு வங்கதேசத்திலிருந்து வெளியேறி கொல்கத்தாவில் தஞ்சமடைந்தார்.
அண்மையில் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக நடந்த போராட்டங்களை அடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கும், பின்னர் புது டெல்லிக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்.