காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்றிரவு குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டிருந்த தீவிரவாதியை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அவனிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வடக்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காரமுல்லா பட்மோர் என்ற கிராமத்தில் சதித் திட்டத்துடன் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்குத் தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். அவனிடமிருந்து ஏ.கே. 47 துப்பாக்கி, கையெறி குண்டுகள், வெடிபொருட்கள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையில், சலூரா என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை ராணுவத்தினர் மீட்டு செயலிழக்கச் செய்தனர். கொல்லப்பட்ட தீவிரவாதிதான் அதை வைத்துள்ளான் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
தேடுதல் வேட்டை முழுமையாக முடிந்த பிறகுதான் கொல்லப்பட்ட தீவிரவாதியின் பெயரை வெளியிட முடியும் என்றும் அவர்கள் கூறினர்.