மணிப்பூர் தலைநகர் இம்பாலில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை காவல்துறையினர் கண்டறிந்து செயலிழக்கச் செய்தனர்.
மணிப்பூரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற எச்சரிக்கையின் பேரில் காவலர்கள் சோதனை நடத்திய போது, இம்பால் அருகில் உள்ள கான்சிபூர் என் குடியிருப்பில் வெடிகுண்டு இருந்ததைப் பொதுமக்கள் கண்டறிந்து தெரிவித்தனர்.
உடனடியாக வெடிகுண்டு வல்லுநர்களுடன் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள் அந்தக் குண்டைச் செயலிழக்கச் செய்தனர். முன்னதாக இன்று காலை ஆயுதங்களுடன் 2 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.