வடக்கு காஷ்மீரில் தேடப்பட்டு வந்த ஹிஸ்புல் முஜாஹூதீன் இயக்கத் தளபதிகள் இருவர் உள்பட 6 முக்கியத் தீவிரவாதிகள் இன்று ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர்.
காஷ்மீரில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல படுகொலைகளைச் செய்துள்ள ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாமி, ஹிஸ்புல் முஜாஹூதீன் இயக்கங்களைச் சேர்ந்த இரண்டு தளபதிகள் உட்பட 6 முக்கியத் தீவிரவாதிகள் இன்று சரணடைந்தனர் என்று தெரிவித்த ராணுவ வட்டாரங்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் பெயர்களை வெளியிட மறுத்து விட்டனர்.
இந்தத் தீவிரவாதிகள், ஜம்முவில் உள்ள தோடா மாவட்ட மறைவிடங்களில் பதுங்கி சதிச் செயல்களைச் செய்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து பலவகையான பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுதாக ராணுவம் தெரிவித்துள்ளது.