அயோத்தியில் ராமர் கோவில் இயக்கத்தின் நிர்வாகியான நிருத்ய கோபால்தாஸ் என்ற சாமியாருக்கு அல் காய்டா பயங்கரவாத இயக்கம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார் அஞ்சலகத்தின் முத்திரை கொண்ட மிரட்டல் கடிதம் இன்று காலை நிருத்ய கோபால்தாசிற்குக் கிடைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல் காய்டா இயக்கத்தின் பெயரில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், ''உங்களின் சீடர்களுடன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் மரணத்தைச் சந்திப்பீர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.