ஆந்திராவில் இருவேறு இயக்கங்களைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 நக்சலைட்டுகள் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
ஆந்திர மாநிலம் கம்மம் பகுதியில் மறைவாக இயங்கிவரும் நக்சலைட்டுகளைச் சரணடையச் செய்யும் முயற்சிகளைக் காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
அவ்வாறு சரணடையும் நக்சலைட்டுகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நீக்குவதாகவும் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஜனசக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண், பிரஜாபிரதிகதனா (மோகன தளம்) இயக்கத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 5 நக்சலைட்டுகள் கம்மம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ்.செளகான் முன்பு சரணடைந்தனர்.