சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று சீன பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள இரு தலைவர்களும், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
குறிப்பாக இந்தியா-சீனா இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
தங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை 2010ம் ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலராக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. தற்போது இந்த வர்த்தகம் 7 பில்லியன் டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பின் போது மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத், சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.