'மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் உழவர்களுக்கு எதிராக நடந்துள்ள வன்முறைகள் கம்யூனிஸ்டுகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு ஒரு உதாரணம்' என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
புதுடெல்லியில் இன்று நடந்த பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் நந்திகிராம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே.அத்வானி, நந்திகிராமில் நடந்துள்ள வன்முறைகள், கம்யூனிஸ பயங்கரவாதம் என்பது உலகம் முழுவதும் நடந்துவரும் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களுக்கு சிறிதும் குறைந்தவை அல்ல என்பதை எடுத்துக் காட்டியுள்ளது என்றார்.
கூட்டத்திற்குப் பிறக செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் விஜய்குமார் மல்கோத்ரா, வரவிருக்கும் இமாச்சல பிரதேசம், குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெறுவற்காக தங்களின் பெரும்பகுதி நேரத்தை பா.ஜ.க. எம்.பி.க்கள் செலவிட வேண்டும் என்று அத்வானி வலியுறுத்தினார் என்று கூறினார்.