Publish Date: Mon, 19 Nov 2007 (11:01 IST)
Updated Date: Mon, 19 Nov 2007 (11:01 IST)
மணிப்பூரில் நடந்த மோதலில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகில் உள்ள தங்மெய்பந்த் என்ற பகுதியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். அப்போது காரில் வந்த 3 நபர்கள் காவலர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து காவலர்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளில் ஒருவன் கொல்லப்பட்டான். மற்ற இருவரும் தப்பிவிட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றும், 3 சுற்றுகள் துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய தீவிரவாதிகளைக் காவலர்கள் தேடி வருகின்றனர்.
Webdunia
Publish Date: Mon, 19 Nov 2007 (11:01 IST)
Updated Date: Mon, 19 Nov 2007 (11:01 IST)