Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐந்து இந்திய நிறுவனங்களுக்கு சர்வேதச விருது!

Advertiesment
ஐந்து இந்திய நிறுவனங்களுக்கு சர்வேதச விருது!

Webdunia

, சனி, 17 நவம்பர் 2007 (18:29 IST)
பிரபல பொருளாதார பத்திரிகையான வால்ஸ்டீரிட் ஜெர்னல் ஐந்து இந்திய நிறுவனங்களை சிறந்த வர்த்தக நிறுவனங்களாக தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த இதழின் ஆசிய பதிப்பான வால்ஸ்டீரிட் ஜெர்னல் ஆசியா, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் சிறந்த நிறுவனங்களை தேர்‌ந்தெடுத்து விருது வழங்குகிறது.

இந்த வருட போட்டியில் 16 நாடுகளில் இருந்து 265 நிறுவனங்கள் கல‌ந்து கொண்டன. இதில் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து நிறுவனங்களும் இந்தியர்களுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் விருதுக்கு யூ.எப்.ஓ மூவிஸ் தேர்‌ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது திரைப்படங்களை விநியோகிக்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இது திரைப்படம் திரையிடப்படும் முதல் நாளிலேயே நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள திரைப்பட அரங்குகள் உட்பட நாடு முழுவதிலும் உள்ள அரங்குகளில் திரையிடும் வகையில் திரைப்பட விநியோகத்திலேயே மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக விருது வழங்கப்படுகிறது.

விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த மற்ற நிறுவனங்கள். இந்தோனிஷியாவில் உள்ள இந்தோரமா குழுமம். எஸ்தோனியாவில் உள்ள தோலோராம் குழுமம், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வர்கே குழுமம், சிங்கப்பூரில் உள்ள கேட்வே டிஸ்டிரிபிகாஸ் ஆகியவை.

இந்த விருதுகளை சிங்கப்பூர் பிரதமர் லீ ஹூசின் லூங் சிங்கப்பூரில் இந்த வாரம் நடைபெறும் குளோபல் என்ட்ரோபலிஸ் அட் சிங்கப்பூர் விழாவில் வழங்குகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil