Publish Date: Fri, 16 Nov 2007 (17:29 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:26 IST)
இந்திய-வங்கதேச எல்லையில் அரிய வன பாம்பு, ஆமைகளை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திரிபுரா மாநிலம் லன்கமுரா கிராமத்தில் வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் 6 இந்தியர்களும், 1 வங்கதேசத்தவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து அரியவகைப் பாம்புகள், ஆமைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான 7 பேரும் அகர்தலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு, ஆமைகள் வன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.