இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மீது மக்களவையில் வரும் 27ஆம் தேதி விவாதம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவிருப்பதால், அவர் நாடு திரும்பியபிறகு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதன்படி மன்மோகன் சிங் 25ஆம் தேதி நாடு திரும்பியதற்குப் பிறகு மக்களவையில் 27ஆம் தேதி, மாநிலங்களவையில் 28ஆம் தேதியும் அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது விவாதம் நடைபெறும் என்றும் கூறினார்.
அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது நவம்பர் 16ஆம் தேதி (இன்று)மக்களவையிலும், நவம்பர் 19ஆம் தேதி மாநிலங்களவையிலும் விவாதம் செய்யப்படுவதாக இருந்தது, அது தற்போது மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.