குஐராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முறையான அறிவிப்பு நாளை வெளியாவதைத் தொடர்ந்து தேர்தல் நடைமுறை அங்கு அமலுக்கு வருகிறது.
டிசம்பர் 11-ம் தேதி முதற்கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள 87 தொகுதிகளுக்கான அறிவிப்பு நாளை வெளியிடப் படுகிறது.
இத்தேர்தல் செளராஷ்டிரா, பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகள் சிலவற்றிலும் நடைபெறுகிறது. ஏனைய95 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக வரும் 16 -ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
நேர்மையாகவும்,நியாயமாகவும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம்விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஏற்கனவே இத்தேர்தல் தொடர்பாக தலைமை தெர்தல் ஆணையர் என்.கோபாலசாமி, தேர்தல் ஆணையர்கள் நவீன் சாவ்லா, எஸ்.ஒய்.குரேஷி ஆகியோருடன் குஐராத் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா படுகொலைக்குப் பின்னர் நடைப்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக டெஹல்கா அம்பலப் படுத்திய விஷயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் பா.ஐ.க-காங்கிரஸ் இடையே போட்டா போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம்தேதி நடைபெறுகிறது. கடந்த 2002 தேர்தலில் ஆளும் பா.ஐ.க 127 தொகுதிகளையும், காங்கிரஸ் 51 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதா தளம், சுயேட்சைகள் தலா இரண்டு இடங்களையும் பெற்றிருந்தன.