Publish Date: Tue, 13 Nov 2007 (21:01 IST)
Updated Date: Tue, 13 Nov 2007 (21:01 IST)
தான் பதவியேற்றவுடன் பல விடயங்களை வேகமாகச் செய்ய நினைத்ததாகவும், எதார்த்தத்தில் அது முடியாமல் போய்விட்டதாகவும் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த டெக்ஸ்மாகோ என்ற நிறுவனத்துடன் மேற்குவங்க அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இன்று கையெழுத்திட்டது.
அப்போது டெக்ஸ்மாகோ நிறுவனத்தின் தொழிற்சாலைக் கட்டடங்களை முதல்வர் புத்ததேவிற்கு அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் இயக்குநர் மகேஷ்வரி சுற்றிக் காண்பித்தார்.
கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் 'இப்போதே செய்துமுடி' என்ற வாசகங்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதைப் படித்த முதல்வர் புத்ததேவ், ''நீங்கள் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறீர்கள் ஆனால், நான் சில விடயங்களில் தோல்வியடைந்து விட்டேன்'' என்று கூறியுள்ளார்.
ஆனால், எந்தவிடயங்களில் அவர் தோல்வியடைந்தார் என்பதை விளக்கமாகக் கூறவில்லை.
Webdunia
Publish Date: Tue, 13 Nov 2007 (21:01 IST)
Updated Date: Tue, 13 Nov 2007 (21:01 IST)