Newsworld News National 0711 12 1071112044_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் மோத‌ல்: 3 பய‌ங்கரவா‌திக‌ள், 1 ராணுவ‌‌வீரர் ப‌லி!

Advertiesment
ஜெ‌ய்‌ஷ் இ முகமது பய‌ங்கரவா‌திகள்  வட‌க்கு கா‌ஷ்‌மீ‌‌ர்  பாரமு‌ல்லா
, திங்கள், 12 நவம்பர் 2007 (18:43 IST)
கா‌ஷ்‌மீ‌ர் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல் நே‌ற்‌றிரவு முழுவது‌ம் நடைபெ‌ற்ற மோத‌‌லில் பா‌கி‌ஸ்தானை‌ச் சே‌ர்‌ந்த ஜெ‌ய்‌ஷ் இ முகமது இய‌க்க‌‌த்தை‌ச் சே‌ர்‌ந்த தளப‌தி ஒருவ‌ன் உ‌ட்பட 3 பய‌ங்கரவா‌திகளு‌ம், 1 ராணுவ‌‌வீரரு‌ம் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

வட‌க்கு கா‌ஷ்‌மீ‌‌ரி‌‌ல் பாரமு‌ல்லா, பு‌ல்வாமா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ன் எ‌ல்லைக‌ளி‌ல் பய‌ங்கரவா‌திக‌ளி‌ன் ஊடுருவ‌ல் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. கட‌ந்த ஒரு வார‌த்‌தி‌ற்கு‌ம் மேலாக அ‌ங்கு பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம் ராணுவ‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் மோத‌ல் நட‌ந்து வரு‌கிறது.

பு‌ல்வாமா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் சோ‌ப்பூ‌ர் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல் நே‌ற்‌றிரவு ‌மீ‌ண்டு‌ம் மோத‌ல் வெடி‌த்தது.

இ‌தி‌ல் பா‌கி‌ஸ்தானை‌ச் சே‌ர்‌ந்த ஜெ‌ய்‌ஸ் இ முகமது இய‌க்க‌‌த்தை‌த் சே‌ர்‌ந்த தளப‌தி மு‌ஸ்தா‌க் அகமது எ‌ன்ற ஜா‌கி‌த் எ‌ன்பவனு‌ம், ஹ‌ர்க‌த் உ‌ல் முஜாகு‌தீ‌ன் இய‌க்க‌த்தை‌ச் சே‌ர்‌ந்த பய‌ங்கரவா‌திக‌ள் இருவரு‌ம் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

இரவு முழுவது‌ம் தொட‌ர்‌ந்த மோத‌லி‌ல் ‌சிற‌ப்பு ஆயுத‌ப் படையை‌ச் சே‌ர்‌ந்த ராணுவ ‌வீர‌ர் ஒருவரு‌ம் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். மோதலையடு‌த்து அ‌ப்பகு‌தி முழுவது‌ம் ‌மூடப்பட்டது.


Share this Story:

Follow Webdunia tamil