சிறிலங்காவில் மறைந்த முன்னாள் அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமரின் நினைவுநாள் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று இலங்கை புறப்பட்டுச் சென்றார்.
சிதம்பரம் தனது பயணத்தின் போது சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, அயலுறவு அமைச்சர் ரோகித பொகொல்லகாம ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்செல்வன் கொல்லப்பட்ட பிறகு அங்கு நிலவும் அரசியல் சூழல் பற்றி விவாதிப்பார் என்று கருதப்படுகிறது.
தமிழக மீனவர்களின் மீது சிறிலங்க கடற்படையினர் தொடர்ந்து நடத்திவரும் தாக்குதல்கள் குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் அமைச்சர் சிதம்பரம் விவாதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.