ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் 16 மணிநேரம் நடைபெற்ற கடுமையான மோதலில் 4 ராணுவத்தினர், 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
''பட்டான் கிராமத்தில் உள்ள சில வீடுகளில் தீவிரவாதிகள் தங்கியிருப்பதாகத் தகவல் வந்ததன் அடிப்படையில் அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.
அப்போது தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இன்று காலை வரை சுமார் 16 மணிநேரம் நீடித்த மோதலின் இறுதியில் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராணுவ அதிகாரி மேஜர் வீரேந்தர் உட்பட ராணுவத்தினர் 4 பேர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்துள்ளன.'' என்று மூத்த ராணுவஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு நடைபெற்றுள்ள மிகப்பெரிய மோதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.