பாகிஸ்தானில் அவசரநிலை விரைவில் கைவிடப்பட்டு அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தானில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்களை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. அமைதி, பொருளாதார வளர்ச்சி, அரசியல் நிலைத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் முயற்சிகளே பாகிஸ்தானுக்குத் தேவை என்று பிரணாப் கூறினார்.
பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், அரசியல் சட்டப்படி தாங்கள் விரும்பும் அரசைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தான் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.