பாகிஸ்தானில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அவசரநிலை கொடுமையானது என்றும் அங்கு விரைவில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு அமைதி திரும்பிவிடும் என்று தான் நம்புவதாகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறியுள்ளார்.
அவசரநிலையை பிரகடனம் செய்திருப்பது இந்திய- பாகிஸ்தான் உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால், அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரவேண்டும் என்றும் பரதன் வலியுறுத்தியுள்ளார்.