சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 15 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் பகுதியில் உள்ள இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தின் எல்லையில் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள தொங்காடா கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினரின் மீது நக்சலைட்டுகள் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
கொல்லப்பட்ட காவலர்கள் சத்தீஷ்கர் மாநில ஆயுதப் படையையும், பீஜப்பூர் மாவட்டக் காவல்துறையையும் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த பகுதிகளில் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.