சிக்கலான அரசியல் சூழ்நிலையில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தேசியச் செயற்குழுக் கூட்டம் கர்நாடகாவில் இன்று தொடங்கியது.
கராக் நகரில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டம், குஜராத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசயங்களைப் பற்றிய விவாதங்கள் நடைபெறவுள்ளன.
சிறுபான்மையினருக்கு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் விவாகாரம் உள்ளிட்ட உணர்வு ரீதியான விசயங்கள் பற்றிய விவாதங்களும் நடைபெறவுள்ளன. இது தவிர அமைப்பு விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள், புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகியவையும் நடைபெறவுள்ளன.
தென்மாநிலங்களில் முதன் முறையாக கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கூட்டத்தில் அமைப்பின் தலைவர் கே.எஸ்.சுதர்சன், முதன்மைச் செயலர் மோகன் பகவதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார்.