Publish Date: Fri, 02 Nov 2007 (15:49 IST)
Updated Date: Fri, 02 Nov 2007 (15:48 IST)
மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையிலிருக்கும் இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் பிணை மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கடந்த 1993 -ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது புனேவில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் தத் உச்சநீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனு மீதான விசாரணையை வருகின்ற 20-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Webdunia
Publish Date: Fri, 02 Nov 2007 (15:49 IST)
Updated Date: Fri, 02 Nov 2007 (15:48 IST)