அமெரிக்காவின் கருவூலச் செயலர் ஹென்றி பால்சன் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தார்.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்த ஆண்டிற்குள் செயல்படுத்த வேண்டும் என்று நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறது.
இதை அந்நாட்டு அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், செயலர் நிக்கோரஸ் பர்ன்ஸ் ஆகியோரும் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் பிரதமருடனான ஹென்றி பால்சனின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.