Publish Date: Mon, 29 Oct 2007 (17:12 IST)
Updated Date: Mon, 29 Oct 2007 (17:12 IST)
பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜனை தான் சுட்டுக் கொல்லவில்லை என்று அவரின் சகோதரர் பிரவீன் மகாஜன் மறுத்துள்ளார்.
பா.ஜ.க. நிர்வாகிகளில் ஒருவாரான பிரமோத் மகாஜன் கடந்த ஆண்டு ஏப்ரல் 22 -ஆம் தேதி மும்பையில் அவரது இல்லத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரைப் பணத்திற்காகச் சுட்டுக் கொன்றதாக அவரின் சகோதரர் பிரவீன் மகாஜன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்காக பிரவீன் ஆஜர் செய்யப்பட்டார்.
அப்போது அவர், ''பிரமோத் மகாஜன் என்னை ஒரு தந்தைபோல கவனித்துக் கொண்டார். அவர் மீது நான் மிகுந்த பாசம் வைத்துள்ளேன்.
பிரமோத் மகாஜன் இறந்த விவரத்தைச் செய்தித் தாள்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரமோத் மகாஜனிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டதாகக் கூறப்படுவதையும் பிரவீன் மறுத்துள்ளார்.
இதை நீதிமன்றம் பதிவுசெய்துகொண்டது.
Webdunia
Publish Date: Mon, 29 Oct 2007 (17:12 IST)
Updated Date: Mon, 29 Oct 2007 (17:12 IST)