Publish Date: Fri, 26 Oct 2007 (13:30 IST)
Updated Date: Fri, 26 Oct 2007 (13:30 IST)
இராஜஸ்தானில் உள்ள புனிதத் தலமான அஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்தது தொடர்பாக ஜார்கண்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராஜஸ்தான் மாநிலம் சாரு மாவட்டத்திலுள்ள மதராசா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் குஷிபூர் ரெஷ்மான் என்பவரை ஜார்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்திலுள்ள தாக்கூர் குண்டி என்ற
கிராமத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கை புலனாய்வு செய்துவரும் சிறப்பு காவல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குஷிபூர் ரெஷ்மான், லஸ்கர் - இ - தயீபா இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்பட்டாலும், அவரைப் பற்றிய எந்தத் தகவலையும் காவல் துறையினர் வெளியிடவில்லை.
Webdunia
Publish Date: Fri, 26 Oct 2007 (13:30 IST)
Updated Date: Fri, 26 Oct 2007 (13:30 IST)