அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சந்தரிபாபு நாயுடுவுடன் பேசவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா சரத்பவா தெரிவித்துள்ளார்.
ஆக்கப்பூர்வ பணிகளுக்கு அணுசக்தியை பயன்படுத்துவது தொடர்பான இந்திய - அமெரிக்க இடையேயான ஒப்பந்தத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும், பிரதான கூட்டணிக் கட்சியான இடதுசாரிகள், கூட்டணிக்குள் உள்ள சில கட்சிகளும் மற்றும் 3வது அணியில் உள்ள கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அத்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் அந்த ஒப்பந்தத்தை முழுவதுமாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அது தொடர்பாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் இடதுசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா பிரகாஷ் காரத் தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எர்ரன் நாயுடு மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளா அமர்சிங்கை சந்தித்தப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், 3வது அணியின் ஒருங்கிணைப்பாளருமான சந்திரபாபு நாயுடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர்.
அதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய விவசாயத் துறை அமைச்சருமான சரத்பவாரை, சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இடது சாரிகளின் ஐயங்களைப் போக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தயாராக உள்ளது. எனினும் பாஜக கடந்த மழைக்கால கூட்டத் தொடரை நடக்கவிடாமல் செய்தது போன்று செயல்படாது என்று உத்தரவாதம் கிடைக்கும் நிலையில் நாடாளுமன்றத்தைக் கூட்ட மத்திய அரசு தயாராக உள்ளது என்று இடதுசாரிகளிடம் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் இடதுசாரிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டை சரத்பவார் எடுக்க வலியுறுத்தவே சந்திரபாப நாயுடு வந்ததாக பரவிய செய்தியை சரத்பவார் மறுத்துள்ளார். மேலும் ஆந்திர விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசவே சந்திரபாபு நாயுடு தம்¨ம் சந்திக்க விவசாயிகள் குழுவினருடன் வந்ததாக தெரிவித்தார்.