இந்தியா, ரஷ்யா, சீனா நாடுகளின் அயலுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று சீனா செல்கிறார்,
சர்வதேச அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனாவும், இந்தியாவும் இருந்து வருகின்றன,. ரஷ்யாவும் சீனாவும் வல்லரசு நாடுகளாக இருந்து வருகின்றன,
இந்தியா - சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்க்க சீனா ஆர்வம் காட்டி வருகிறது,
இந்நிலையில் சீனாவில் உள்ள ஹர்பின் நகரில் நாளை நடைப்பெற உள்ள அயலுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் ரஷ்ய அயலுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் சீனா அயலுறவுத் துறை அமைச்சர் யங்ஜெயெச்சி ஆகியோருடன் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்த உள்ளார், இதற்காக பிரணாப் சீனா செல்கிறார்,
அயலுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் ஆசிய மற்றும் சர்வதேச சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுவதோடு அதில் மூன்று நாடுகளும் இணைந்து எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்றும் முத்தரப்பு ஒத்துழைப்பை எந்தெந்த துறைகளில் நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்குரிய சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளதாக அயலுறவுத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது,
இந்த சந்திப்பின் போது அமைச்சர் பிரணாப் முகர்ஜி சீன அயலுறவுத் துறை அமைச்சருடன் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சு நடத்துவார் என்றும் கூறப்படுகிறது,