கள்ள நோட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தாவூத் இப்ராகிமின் கூட்டாளி ஒருவன் கடந்த வாரம் தப்பிச் சென்றான். அவனை தெற்கு டெல்லியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் தாவுத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவனான அனில் சோனி என்ற இக்பாலை காவல்துறையினர் கைது செய்து அவன் மீது வழக்கு பதிவு செய்தனர்,
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து சிறையிலடைக்கப்பட்ட இக்பால் மற்றொரு கள்ள நோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு நீமிமன்றத்தில் ஆஜர்படுத்த ரயிலில் வரும் போது ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டான்.
தீவிரமாக தேடப்பட்ட அவனை தெற்கு டெல்லி காவல்துறையினர் இன்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.