Publish Date: Mon, 22 Oct 2007 (20:46 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)
ஐக்கிய முற்போக்கு - இடது கூட்டணி கட்சித் தலைவர்களைக் கொண்ட ஆய்வுக் குழு தனது அறிக்கையை அளித்தப் பிறகே அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
டெல்லியில் இன்று மாலை நடந்த ஐ.மு - இடது கூட்டணி ஆய்வக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “இக்குழுவின் முன்னுள்ள பிரச்சனைகள் முறையாக அலசி ஆராயப்பட்டு அது அளிக்கும் அறிக்கையை கருத்தில் கொண்டே அணு சக்தி ஒப்பந்தம் நடைமுறைபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
இக்குழுவின் அடுத்த கூட்டம் அடுத்த மாதம் 16-ஆம் தேதி நடைபெறும் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.
Webdunia
Publish Date: Mon, 22 Oct 2007 (20:46 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)