Publish Date: Sat, 20 Oct 2007 (17:19 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)
தற்கொலைத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவுடன் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தாக்குதலிற்கு கண்டனமும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்!
இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் வீரப்ப மொய்லி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வன்முறை கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்த நோக்கம் தேவை என்று பெனாசிர் புட்டோவிடம் சோனியா காந்தி வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.
ஜனநாயகத்திற்கும், நாகரீக சமூகத்திற்கும் பயங்கரவாத சக்திகளும், வன்முறையும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும், அந்தப் பேரழிவில் இருந்து உலகத்தைக் காப்பாற்ற அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உறுதியுடன் பணியாற்ற வேண்டும் என்று சோனியா காந்தி பெனாசிரிடம் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெறுப்புணர்ச்சியும், வன்முறையும் பொதுவான நோக்கத்தின் ஒற்றுமையின் பலத்தால் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.
Webdunia
Publish Date: Sat, 20 Oct 2007 (17:19 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)