Publish Date: Fri, 19 Oct 2007 (19:41 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது என்று இந்தியா கூறியுள்ளது.
''கராச்சியில் நேற்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். மூத்த அரசியல் தலைவர்களைக் குறிவைப்பதோடு அப்பாவிகளின் உயிரையும் பறிப்பது கண்டிக்கத்தக்கது'' என்று மத்திய அயலுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்ணா கூறியுள்ளார்.
''தெற்காசியாவில் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு வலிமையான, உறுதியான நடவடிக்கைகளை எல்லா அரசுகளும் இணைந்து மேற்கொள்வது அவசியம்'' என்றும் அவர் கூறினார்.